Published on 11/03/2021 | Edited on 11/03/2021
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வெளியான 'கண்டா வரச் சொல்லுங்க' மற்றும் 'பண்டராத்தி புராணம்' ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மூன்றாவது பாடலாக 'திரௌபதையின் முத்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ள பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'தட்டான்... தட்டான்' எனத் தொடங்கும் இந்தப் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். பாடல் வெளியாகி மிகக் குறுகிய நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ளது.