கடந்த தீபாவளியன்று பிகில் படத்துடன் வெளியான கார்த்தியின் 'கைதி' படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு வெற்றி பெற்றுள்ளது. நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியான இப்படத்தின் இதர மொழிகளின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் 'கைதி' படத்தின் மொத்த வசூல் சுமார் 110 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிகிலை காட்டிலும் குறைவாக 250 திரையரங்குகளில் மட்டும் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால், தொடர்ச்சியாக திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு தற்போது 3 வாரங்களில் இந்தப் படம் 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கைதி படம் இந்த ஆண்டின் நல்ல லாபம் கொடுத்த படங்கள் வரிசையில் இணைந்துள்ளது.