Skip to main content

காலா படத்திற்கு ஏற்பட்ட தடை நீக்கம்...?

Published on 31/05/2018 | Edited on 01/06/2018
kaala rajini


ரஜினியின் 'காலா' படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் இப்படத்தை கர்நாடகாவில் வெளியாக விடமாட்டோம் என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தற்போது அறிவித்ததையடுத்து தமிழ் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
 

 

 

 


இந்நிலையில் இன்று நடந்த பேச்சு வார்த்தையையடுத்து பத்திரிகையாளர்களிடம் விஷால் பேசியபோது... "ரஜினி சார் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம். நேற்று மாலை இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில்,  இன்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல் வேறு. மேலும் இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை விரைவில் சந்திப்போம். காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் என பலரும் பேசியுள்ளோம். அது எங்களின் தனிப்பட்ட கருத்து, அதனால் படம் பாதிக்க கூடாது. சினிமாவையும், அரசியலையும் ஒன்று சேர்க்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். ரஜினி சார் அரசியல் வருவதில் தவறில்லை. படம் வெளிவரும் போது அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே, மாநிலங்கள் ஒரு எல்லைக்கோடு அவ்வளவுதான். எனவே இந்த பிரச்சனையில் ஒரு நல்ல முடிவு எட்டும் என்று நம்புகிறோம்" என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்