நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இசையமைப்பாளர் சித்து குமாரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவரளித்த பதில்கள் பின்வருமாறு..
ஜோ படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை முடிந்து பைனல் அவுட்புட் எடுக்கும் போது இரு ஒரு கம்போசராக எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப திருப்தியாக இருந்தது. திரையரங்கில் என்ன ரிசல்ட் வரும் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. பெரும் வெற்றியைக் கண்ட பிறகு இன்னும் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனதினை பக்குவப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.
ராஞ்சனா, ரப்னே பனா ஜோடி போன்ற பாலிவுட் படங்களின் இசைக்கோர்வை எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும், அது நான் இசையமைக்கும் போது இன்ஸ்பிரேசனாகவும், ரொமாண்டிக் மூட் செட்டுக்கும் பயன்படும். சர்வதேச இசையமைப்பாளர்களின் இசை அதிகம் கேட்பேன், உறவுகள் தொடர்கதை பாடலை அடிக்கடி கேட்பேன், அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாகவும் எப்போதுமே இருக்கிறது.
ஜோ படத்திற்கு இசையமைக்கும் போது படத்திற்கு அப்பாற்பட்டு போய்விடக்கூடாது, அது படத்துடனேயே பயணிக்க விரும்பியே வேலையை ஆரம்பித்தேன். உருகி பாடல் தான் முதலாவதாக ஆரம்பமானது அதற்கடுத்த பாடலுக்கான வரிகள் கூட நாயகன் ரியோ தான் எடுத்துக் கொடுத்தாரு, அவர் பாடல் எழுதப்போறேன்னு சொன்னதும் நம்பவில்லை, அப்புறம் அதை தவிர்க்கும்படியாக இல்லாமல் சிறப்பாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் ஆகிவிட்டது.