Skip to main content

சர்வதேச விருது பெற்ற ‘யாத்திசை’

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

International award-winning 'Yaathisai'

 

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய  திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய கதைதான் 'யாத்திசை'. 

 

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் பிரமாண்டமாகவும், படத்தில் பேசிய பழங்கால தமிழ் மொழி எனப் பல்வேறு அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பாராட்டைப் பெற்றது.

 

இந்நிலையில் இப்படமானது 2022- 2023 ஆண்டிற்கான கனடா டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டது . நூற்றிற்கும் மேலான உலக நாடுகளின் திரைப்படங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் சிறந்த திரைப்படமாக (People choice award) யாத்திசை தேர்வாகியுள்ளது.. செப்டம்பர் 8  தொடங்கி 10 தேதி வரை விழா நடைபெற்றது . கனடா நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் சினிமா விரும்பிகள் இவ்விழாவை பார்த்து சிறப்பித்தனர். சர்வதேச விருது பெற்ற யாத்திசை படக்குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்