Skip to main content

பெண் காவலர்கள் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ‘துரங்கா 2’

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

duranga 2 update

 

ஜீ5 நிறுவனம் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜீ5 கேம் சேஞ்சர் (ZEE5 Game Changers) என்ற நிகழ்வை அறிவித்துள்ளது. புது தில்லி தலைமையகத்தில் பெண் காவல்துறையுடன், 'துரங்கா சீசன் 2' நடிகர்கள் இணைந்து இந்த பிரச்சார நிகழ்வைத் தொடங்கினர். இந்நிகழ்வில் பிரபல நடிகர்களான அமித் சாத், த்ரஷ்தி தாமி, இயக்குநர் ரோஹன் சிப்பி மற்றும் ஜீ5-ன் மார்க்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட அமலாக்கத்துறையில் பெண்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஆலோசித்து உரையாடினர். 

 

இந்நிகழ்வில் ஒரு பெண் காவலரின் கதையுடன் அடையாளத் திருட்டு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, வரவிருக்கும் உளவியல் த்ரில்லர் ‘துரங்கா 2’ சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. காவல்துறைப் பணியாளர்களின் அனுபவங்களையும் பயணத்தையும் பகிர்ந்து கொண்ட டிசிபி மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா, துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமியுடன் இந்நிகழ்வில் இது குறித்த உரையாடலில் ஈடுபட்டார்.

 

டெல்லி காவல்துறை டிசிபி மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா கூறுகையில், "சமூக அக்கறையுடன் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்புகளை ஜீ5 வழங்கி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த நிறுவனம், பெண் காவலர்களின் பணியை அங்கீகரித்துப் பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தில்லி காவல் படையின் பெண் காவலர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் அதைக் கடந்து சவாலான பணிகளைச் செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் இம்மாதிரியான பாராட்டுக்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் நகரத்திற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அதிகரிக்கிறது" என்றார், 

 

ஜீ5 மார்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா கூறுகையில், "ஜீ5 இல் கல்வி மற்றும் சமூக அக்கறைமிக்க புதுமையான படைப்புகளில் முதலீடு செய்வதே எங்கள் முக்கிய நோக்கமாகும். தற்போதைய மாறிவரும் சமூகத்தில் கதைசொல்லலின் உருமாறும் சக்தியை நாங்கள் நம்புகிறோம். மாறுபட்ட கதை சொல்லலின் வழியேவும், அதனைச் சந்தைப்படுத்தும் முயற்சிகள் மூலமாகவே நாம் பரந்த பார்வையாளர்களை இணைத்து, அவர்களிடம் கல்வி மற்றும் பல கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை அங்கீகரிக்கிறோம். இந்த நிகழ்வின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எங்கள் பார்வையாளர்களுடன் இணைந்து, அனைவரும் தொடர்புகொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதுபோன்ற ஒவ்வொரு முயற்சியிலும், முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை உருவாக்குவதையும், எங்கள் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் தரமான கதைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்