Skip to main content

"அஜித்தை கேலி செய்வதற்காக அந்த சீன் வைக்கப்பட்டதா?" - 'யூத்' பட இயக்குநர் விளக்கம் 

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

Vincent Selva

 

நடிகர் விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் வின்சென்ட் செல்வா, நக்கீரனுடனான முந்தைய நேர்காணலில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அதில், யூத் படத்தில் அஜித்தை மறைமுகமாக கேலி செய்வதுபோல இருப்பதாகக் கூறப்படும் அந்தக் குறிப்பிட்ட சீன் திட்டமிட்டு வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...   

 

"பொதுவாக யாரையும் காயப்படுத்த விஜய் சார் விரும்பமாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில், வேறு ஏதாவது நடிகரைப் பற்றி கிண்டல் செய்தால் அதையே விஜய் சார் அனுமதிக்கமாட்டார். யூத் படத்தில் வில்லன் அது அது என்று சொல்ல, அதற்கு விஜய் சார் எதுடா எது என்று கேட்கும் காட்சியை எடுக்கும்போது ரெட் படத்தில் அஜித் சார் அப்படி பேசுவார் என்பதே எங்களுக்கு தெரியாது. யூத் பார்த்துவிட்டு யாரோ ஒருவர் எனக்கு போன் செய்து கேட்டார். விஜய் சாரிடம் இதை நான் சொல்லியபோது நாம அப்படி நினைச்சு பண்ணலயே செல்வா, எங்க வருது அந்த சீன் என்று கேட்டார். விஜய் சாருக்கும் அந்த சீன் நினைவில் இல்லை. பிற படங்களில் வந்தது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், என் படத்தில் தெரியாமல்தான் நடந்தது. இந்த மாதிரியான விஷயத்தை நான் விரும்பமாட்டேன், விஜய் சாரும் விரும்பமாட்டார்". இவ்வாறு வின்சென்ட் செல்வா தெரிவித்தார்.    

 

 

சார்ந்த செய்திகள்