தில்லுக்கு துட்டு 2 மக்கள் கருத்து ...!!!
சார்ந்த செய்திகள்
Next Story
'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்
நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.
எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.#IngaNaanThaanKingu#GNAnbuchezhian @Sushmitaanbu @gopuramfilms @Gopuram_Cinemas… pic.twitter.com/Jn2629UVP3— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2024
Next Story
“கடவுள் நம்பிக்கையை அரசியல் பண்றது தப்பு” - சந்தானம்
டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியானது. முன்னதாக ட்ரைலர் வெளியானபோது, அதில் இடம்பெற்ற ஒரு வசனம் பெரியாரை அவதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சையானது. பின்பு இசை வெளியீட்டில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என சந்தானம் விளக்கமளித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சந்தானம், மேகா ஆகாஷ், கார்த்திக் யோகி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தானம் பதிலளித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “எந்த கோயிலாக இருந்தாலும் கடவுளை வச்சு காசு பண்றது தப்பு. அதே மாதிரி கடவுள் நம்பிக்கை வச்சு அரசியல் பண்றதும் தப்பு. இதைத்தான் படத்தில் காட்டியிருக்கோம். கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு இருக்கு. இல்லாதவங்களுக்கு இல்லை. அதனால் இரண்டு பேருக்குமே பொதுவாகத்தான் வச்சிருக்கோம். என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது இருக்கு. நான் சாமி கும்புடுகிறவன். ஒரு ஆன்மீகவாதி” என்றார்.