Skip to main content

புது கெட்டப்பில் தனுஷ்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

dhanush visit tirupati temple

 

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படமும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதுமட்டுமல்லாமல் மீண்டும் இந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' (Tere Ishk Mein) என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

இப்படி படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலை தனது குடும்பத்துடன் சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளார். மேலும் மொட்டை அடித்துள்ளார். பின்பு கோவில் வெளியில் வந்தவுடன் அவரை காண ரசிகர்கள் சூழ்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கெட்டப்புடன் தான் தனது 50வது படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்