Published on 14/11/2019 | Edited on 14/11/2019
![rajini](http://image.nakkheeran.in/cdn/farfuture/iOXYNqcGyNx4TQ-Le7eT20p0UckCrnTHyHsPLS4zP10/1573715305/sites/default/files/inline-images/Untitled-1_99.jpg)
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது. மூன்று கட்டங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'தர்பார்' படத்தின் டப்பிங் பணிகள் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் இப்படத்தில் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.