Skip to main content

“கோபத்தை அடக்கத் தெரிந்தவனே...”- ரீமேக் விவகாரம் ரஹ்மான் சூசகம்

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


கடந்த 2009-ல் அபிஷேக்  மற்றும் சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'டெல்லி 6'. இந்தப் படத்தை ஓம் பிரகாஷ் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.இந்தப் படத்தின் இசை ஆல்பம் செம ஹிட் அடிக்க, மசக்கலி என்ற பாடல் ஹிந்தி பேசாதவர்களிடமும் ஹிட் அடித்தது.
 

rahman

 

இந்தப் படத்திலுள்ள 'கேந்தா பூல்' என்ற பாடலை பாட்ஷா என்ற இசையமைப்பாளர் ரீமேக் செய்து டி சீரிஸ் யூ ட்யூப் சேனலில் வெளியிட செம ஹிட் அடித்தது.அதேபோல மசக்கலி பாடலையும் ரீமேக் செய்து நேற்று வெளியிட்டது டி-சீரிஸ்.இந்த வீடியோவில் சித்தார்த் மல்ஹோத்ராவும் தாரா சுதாரியாவும் நடித்துள்ளனர்.

மசக்கலி பாடலை ரீமேக் செய்து அதை கேவலப்படுத்திவிட்டார்கள்,இந்த வெர்சன் ரிலீஸ் செய்யாமலே இருண்டிருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகிறது.இதனால் ட்விட்டரில் மசக்கலி 2.0 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில் இந்த ரீமேக் பாடலின் மூலம் ரஹ்மான் மிகவும் வேதனையில் இருப்பதாகத் தெரிகிறது. ரஹ்மான் எப்போதும் தன்னுடைய கோபத்தையும், விமர்சனத்தையும் ட்விட்டரில் சூசகப் பதிவின் மூலம் தெரிவிப்பார். இந்நிலையில், நேற்றிரவு மசக்கலி பாடல் உருவாகக் காரணமாக இருந்த இசைக் கலைஞர்களுக்கும், படக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் ரஹ்மான் சூசகமாக ரீமேக் பாடலை உருவாக்குபவர்களை விமர்சித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

http://onelink.to/nknapp



“எந்தக் குறுக்கு வழியுமில்லை,நேர்த்தியாக நியமிக்கப்பட்டது,பல தூக்கமில்லாத இரவுகள்,பாடல் வரிகளை எழுதி அதை திருத்தி எழுதுதல்.200-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் உழைப்பால்,சிறந்த பாடலை கிரியேட்டிவ்வாகவும் கடைசி தலைமுறையினர் வரை அதை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பாடல்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்தப் பாடல் உருவாகக் காரணமாக இருந்த படக் குழுவினருக்குத் தன்னுடைய அன்பும் பிரார்த்தனையும் உண்டு என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல இன்ஸ்டாகிராமில், கோபத்தை அடக்க தெரிந்தவனே சிறந்த மனிதன் என்றொரு பதிவை பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்