இந்தியாவில் மீண்டும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (22.04.2021) ஒரேநாளில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்தனர். நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கூடிவரும் நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் இருப்பு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் இணையதளம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கரோனாவுக்கான படுக்கைகள் எங்கு, எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை அறிய ஒரு பயனுள்ள இணையதளம். https://stopcorona.tn.gov.in/beds.php இதில் மிகவும் துல்லியமாக கணக்கிடப்பட்டு காட்டப்படுகிறது. மற்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் புதுப்பிக்கப்பட்டு காட்டப்படுகிறது. இதை உங்களுடன் தொடர்புள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
Useful website to know where hospital BEDS available in TN. This is a very accurate data and gets updated every 1 hour. Please share this with your contacts.https://t.co/srokYuKyj9
— A.R.Murugadoss (@ARMurugadoss) April 23, 2021