Skip to main content

இயக்குனரை 'கல்'லால் அடித்த அஞ்சலி !

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
anjali

 

 

 

'மதுரை வீரன்' படத்தின் இயக்குனரும், பிரபல ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா' 3டி. ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். 'ஏமாலி' படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் ஆகும். இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டபோது 3டி எஃபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் அஞ்சலி வீசவேண்டும், ஆக்சன் என்றதும் எதிர்பாராத விதமாக தோசைக்கல் பறந்து வந்து கேமரா அருகில் நின்ற இயக்குனரின் நெத்தியில் பட்டு புருவம் கிழிந்தது. இரத்தம் வழிய வலியை பொருட்படுத்தாமல் அந்த ஷாட் எப்படி வந்துள்ளது என பார்த்த இயக்குனர் 3டி பிரமாதமா வந்திருக்கு என சொல்லிவிட்டு பிறகுதான் மருத்துமனைக்கு சென்றுள்ளார். நெத்தியில் தையல் போட்டு திரும்புவதற்கு நேரமாகி விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்