Published on 19/02/2020 | Edited on 19/02/2020
அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தாலும் காயம் பயப்படும்படி இல்லாததால் சென்னையில் நடந்த படப்பிடிப்பு முழுவதையும் அஜித் முடித்து கொடுத்துள்ளார். மேலும் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பமாகவுள்ளது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.