Skip to main content

"சிவகார்த்திகேயனுக்கு பதில் என் ஃபோட்டோவை வச்சிருங்கன்னு சொன்னேன்" - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Aishwarya Rajesh Speech at Soppana Sundari Trailer Launch

 

பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சொப்பன சுந்தரி'. எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக படக்குழுவினருடன் கலந்துகொண்டு ட்ரைலரை வெளியிட்டார். 

 

அப்போது இயக்குநர் சார்லஸ் பேசுகையில், ''படத்திற்கு சொப்பன சுந்தரி என பெயர் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதனை படம் பார்க்கும் போது தெரியும். இந்த திரைப்படத்தின் கதை, நம்முடைய வீட்டின் பக்கத்து வீடுகளில் நடைபெறும் கதையாக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரைப்படத்தில் சொப்பன சுந்தரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்வதன் பின்னணியிலும் ஒரு காரணம் இருக்கிறது. இந்த திரைப்படம் திருக்குறள் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த பிறகு, பார்வையாளர்கள் அனைவரும் ஒரு திருக்குறளின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்வார்கள்.'' என்றார்.


.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ''கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். கனா படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, க /பெ ரணசிங்கம் படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, சொப்பன சுந்தரி படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குநர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குநர் தான் நடிகர் நடிகைகளை பிரமாண்டமாகவும்... பிரமிப்பாகவும்... காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம். இயக்குநர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்கமாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். சொப்பன சுந்தரி படத்தை நான் பார்த்துவிட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

 

இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் அனைத்து காட்சிகளும், இயக்குநர் சொல்லித் தந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இயக்குநர் சார்லஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. டாக்டர் படத்தில் நடித்த அனைவரும் இதில் நடித்துள்ளார்கள். அதனால் சிவகார்த்திகேயன் ஃபோட்டோவ தூக்கிட்டு அதற்கு பதில் என் ஃபோட்டோவை வச்சிருங்கன்னு சொன்னேன்.'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்