காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்த அதிதிராவ் ஹிடாரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'மீடூ' குறித்து பேசியபோது...
"நான் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அட்ஜஸ்ட் செய்வது பற்றிய வதந்திகள் வந்தது எல்லாமே உண்மை என்பது அப்போது எனக்கு தெரியாது. அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நான் அப்படி ஒன்றும் செய்து பட வாய்ப்பு பெற தேவையில்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன்பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு எட்டு மாதங்களாக எனக்கு வேலை இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ, மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள். நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீடு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது" என்றார்.