அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனது இல்ல திருமண விழாவிற்கு சாலையின் குறுக்கே வைத்த பேனரால் சூபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் முதல் சினிமா ஹீரோக்கள் வரை இதற்காக தங்களின் அனுதாபங்களை தெரிவித்து, இனி யாரும் பெர்மிஸன் இல்லாத இடங்களில் பேனர்கள் வைக்காதீர்கள். அதற்கு பதிலாக அந்த பணத்தில் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது நடிகர் விஷாலும் சேர்ந்துள்ளார். சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்கும் படம் ஆக்ஷன். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். வருகின்ற 15ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஷால் மக்கள் இயக்கத்திலிருந்து வெளியாகியுள்ள அறிக்கையில், நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் ஆக்ஷன் படத்திற்கு ரசிகர்கள் பேனர்கள், பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டாம். அதற்கு செலவாகும் பணத்தை வைத்து மக்களுக்கு எதாவது உதவி செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.