Skip to main content

நியூசிலாந்து டெஸ்ட்: அணியை வழிநடத்தும் ரோகித் சர்மா? 

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

virat - rohit

 

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ள இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கெதிரான இருபது ஓவர் போட்டிகளில் விளையாடப்போகும் இந்திய அணி நேற்று (09.11.2021) அறிவிக்கப்பட்டது.

 

இதில் எதிர்பார்க்கப்பட்டது போலவே, இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பும்ரா, ஷமி, விராட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான் ஆகியோர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இரண்டு டெஸ்டுகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், அந்தப் போட்டியில் ரோகித் சர்மா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபார்மில் இல்லாத ரஹானே தொடர்ந்து துணை கேப்டனாக இருப்பார் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.