சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த வீரர் விராட் கோலிதான் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னால் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு தடையில் உள்ளார். இந்நிலையில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற் கேள்விக்கு நிச்சயம் விராட் கோலியைத் தேர்வுசெய்வேன் எனக்கூறிய ரிக்கி பாண்டிங், ஒருவேளை ஸ்மித் இருந்திருந்தால் கோலிக்கு இந்த இடம் நிச்சயம் கிடைத்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒருவேளை இந்த வேளையில் ஸ்மித் விளையாடிக் கொண்டிருந்தால், அவர்தான் நம்பர் ஒன் வீரர் என்று மறுக்காமல் கூறியிருப்பேன். காரணம், கடைசி மூன்று நான்கு போட்டிகளில் அவர் விளையாடிய விதமும், அணியை வழிநடத்தியதும் மிகச்சிறப்பாக இருந்தது. குறிப்பாக, கடைசியாக நடந்த ஆஸஸ் தொடரில் ஸ்மித் தனித்துவமாக விளையாடினார் எனவும் தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித்துக்கு இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் கோலி மிரட்டலாக ஆடினால், டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் அசத்தல் காட்டுவார். அதேசமயம், ஸ்மித்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஓராண்டு தடை என்பது நிச்சயம் ஸ்மித்தை ஓவர்டேக் கோலிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.