தான்சானியா நாட்டில் டொடோமா நகரிலிருந்து 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது மொரகரோ நகர்.
இந்த பகுதியில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி திடீரென சாலையில் கவிழ்ந்தது. அதில் கொண்டுசெல்லப்பட்டு எரிபொருள் தரையில் வெள்ளம்போல் ஓடியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் லாரியிலிருந்து வெளியேறும் எரிபொருளை சேகரிப்பதற்காக விரைந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக எரிபொருள் லாரியில் தீப்பிடித்துள்ளது. இதனை அறியாத மக்கள் எரிபொருள் சேகரிப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர்.
தீ மளமளவென பரவ, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தீயினில் சிக்கிக்கொண்டனர். இதில் 95 பேர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் மோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் ஜான் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.