Skip to main content

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு; இந்திய நீதிபதியின் மகள் பலி

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

america mall incident indian judge daughter issue 

 

அமெரிக்காவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு உட்பட்ட டல்லாஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி அன்று மாலை சுமார் 3.30 மணியளவில் திடீரென்று மர்ம நபர் ஒருவர், வணிக வளாகத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மவுரிஹொ ஹர்ஷியா (வயது 33) என்பது தெரியவந்தது.

 

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 8 பேரில் ஒருவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தட்டிகொண்டா (வயது 27) என்பது தெரியவந்துள்ளது. இவர் டெக்சாஸில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறியாளராக பணியாற்றி வந்தவர். இவரின் தந்தை ஹைதராபாத்தில் உள்ள சரூர்நகர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருகிறார். ஐஸ்வர்யாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை பெண்ணின் பெற்றோர் செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்