தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்ட 13 பேர்களில் 8 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களையும் மீட்க மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் வட கிழக்கு பகுதியான தாம் லூவாங் என்ற மலை பகுதிக்கு கடந்த 23-ஆம் தேதி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் கால்பந்தாட்ட வீர்கள் (சிறுவர்கள்) உட்பட 13 பேர் மலையேற்ற பயிற்சியின் போது ஒரு குகையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அங்கு பெய்த கனமழையால் அவர்கள் குகையின் உள்ளே சிக்கிக்கொண்டு இறுதியில் காணாமல்போயினர்.
இவர்களை மீட்க தாய்லாந்து ராணுவம் மற்றும் மீப்பு படை உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் குகையில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் ஈட்பட்டிருந்தனர். ஆனால் குகையில் மயமான நபர்களை கண்டு பிடிக்கமுடியாத நிலையில் ஒன்பது நாட்களை கடந்து அவர்கள் இருக்கும் இடத்தை மிக சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கான அடிப்படை பொருட்களை கொண்டு சென்ற மீட்பு 38 வயதான சமன் குணன் என்ற மீட்பு வீரர் உள்ளே சிக்கி தவிப்பவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று திரும்பும் வழியில் மூச்சுத்திணறி இறந்தார்.
இப்படி பல்வேறு கட்டங்களுக்கு பிறகு மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அங்கு மோசமான வானிலை நிலவுவதால் மீண்டும் மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 4 நான்கு சிறுவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது இன்னும் 4 நான்கு சிறுவர்கள் மீட்க்கப்பட்டு, மீட்க்கபட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மீதம் உள்ள ஐந்து பேரையும் மீட்க துரித நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் மீட்கப்பட்ட 8 பேரின் உடல்நலம் மற்றும் மனநலம் நன்றாக உள்ளது எவ்வித பாதிப்பும் இல்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் மீதம் உள்ள ஐந்து பேரையும் பத்திரமாக மீட்க அந்நாட்டு அரசு முனைப்புடன் இருப்பதால் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிக்கிறது.