பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை கைது செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது.
''பனாமா கேட்'' ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ், அவரது மருமகன் கேப்டன் சர்தார் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறை. மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறை, மருமகனுக்கு 1 ஆண்டு சிறை என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நவாப் ஷெரீப்பின் மனைவி சூல்சூம் நவாஸை காண நவாப் ஷெரிப் மற்றும் அவரது மகள் இருவரும் லண்டன் சென்றுள்ள நிலையில் ஏற்கனவே அவரது மருமகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் திரும்பியுள்ள நவாப்பையும் அவரது மகளையும் கைது செய்ய லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்படும் பட்சத்தில் இருவரும் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனிலிருந்து பாகிஸ்தான் கிளம்பும்போது செய்தியாளர்களை சந்தித்த நவாப் ஷெரிப் ''நான் நாட்டுக்காக போராடுகிறேன் சிறையோ தண்டனையோ என்னை எதுவும் செய்யாது'' என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.