Skip to main content

இந்தியா வளர்ந்த நாடாக மாறியதற்கு முக்கிய காரணம் வாஜ்பாய் - விஜயகாந்த்

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
vi

 

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் முன்னாள் இந்திய பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் செய்தி:

’’முன்னாள் பாரத பிரதமர் மரியாதைக்குரிய அடல் பிகாரி வாஜ்பாய்  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால்  (16.08.2018) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட தலைவராகவும், நாட்டுக்காக தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறியதற்கு முக்கிய காரணம் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். அவர் வழியில் என்று சொல்பவர்கள் உண்மையில் அவர் வழியில் லஞ்சம், ஊழல் இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று நாட்டிலேயே மிகவும் உயரிய பாரத ரத்னா விருதை வாஜ்பாய் அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கினார். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர் வாஜ்பாய் அவர்கள். பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றில் வெற்றிகண்டார்.

 

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும், பாஜக கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.’’
 

சார்ந்த செய்திகள்