முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோர் இல்லங்களில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் நடத்திய சோதனை நடத்தினார்கள். நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்நிலையில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் இதுவரை 2.16 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தங்கமணி திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதில், " அதிமுகவை அழிக்கும் நோக்கில் திமுக பழிவாங்கும் நோக்கில் இந்த சோதனையை திமுக நடத்தியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் களங்கம் ஏற்படுத்தலாம் என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதிமுகவை அழிக்கலாம் என்றும் அவர்கள் நினைப்பது ஒருநாளும் முடியாது. என்னிடம் பணம் கைப்பற்றியதாக வெளியான தகவல் அனைத்தும் பொய். என் செல்ஃபோனை மட்டுமே அவர்கள் வாங்கி சென்றுள்ளார்கள்" என்றார்.