எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருப்பது மாநில அரசு அதை விருப்ப வில்லை என்பதையே காட்டுகின்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது, 22 அரசு பல்கலைகழகங்களில் 21 பல்கலை கழகங்களில் துணை வேந்தர்கள் செயல்பாடுகள் கேள்விகளை எழுப்புகின்றது என தெரிவித்த அவர், துணைவேந்தர் நியபனம், நிர்மலா தேவி விவகாரம் உள்ளிட்டவற்றில் தெளிவான சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீடு தனியார் பள்ளிகளில் சரியாக பின்பற்றப்பட வில்லை என தெரிவித்த அவர், மாணவர் வருகை குறைவு என காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் ஆச்சி குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சரியானதல்ல என தெரிவித்த ஜி.ராம்பிருஷ்ணன், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி பிரச்சினையில் சிக்கி இருக்கும் உற்பத்தியாளர்களின் கோரிக்கையனை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வால்மார்ட் நிறுவனம் சந்தையில் நுழைந்து இருப்பது ஆபத்தானது, இதை எதிர்க்க வேண்டும் என்றார்.
நடிகர் எஸ்வி சேகர் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையிலும், அவரை கைது செய்யாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவரை கைது செய்யமல் இருப்பது மாநில அரசு அதை விருப்ப வில்லை என்பதையே காட்டுகின்றது எனவும் தெரிவித்தார்.
சிபிஎம் கட்சியை பொறுத்த வரை பா.ஜ.க எதிர்ப்பு முதன்மையானது எனவும், அகில இந்திய அளவில் மாநிலத்திற்கு ஏற்றவாறு கூட்டணிகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்த அவர்,பாலகங்காதார திலகர் பயங்கரவாதி என்று ராஜஸ்தான் மாநில பாடபுத்தகத்தில் சொல்லப்பட்டு இருப்பது தவறான தகவல் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.