தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கும், அதேபோன்று ஐந்தாம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திட்டமிட்டவாறே திறக்கப்படும். பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வர் அதனை அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பு தேதியை தள்ளிப்போட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'முதலமைச்சரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.