Published on 14/05/2019 | Edited on 14/05/2019
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து என கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கமல்ஹாசன் வீட்டை சில அமைப்பினர் முற்றுகையிடலாம் என்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிற்கு முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
