Published on 18/09/2018 | Edited on 18/09/2018
![pmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/dI8bnPPJoCD403mn5M8Jw6mDwvE-8CwunDV7_Uz2Ae0/1537257108/sites/default/files/inline-images/Periyar.jpg)
தந்தை பெரியார் சிலை அவமதிப்பு செய்ததை கண்டித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராசு கூறுகையில், ‘’தந்தை பெரியார் சிலை சென்னையிலும், திருப்பூரிலும் அவமரியாதை செய்யப்பட்டதை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பெரியார் வெறும் சிலை அல்ல; தமிழ்ச் சமூகத்தின் முகவரி; பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றோரின் கருத்துக்களோடு விவாதிக்க முடியாதவர்கள் தொடர்ந்து அவர்களை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. சுயமரியாதை, சமதர்மம், சமூகநீதி கொள்கைகளுக்ககாக தொடர்ந்து அயராது உழைப்போம் என தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதியேற்போம்’’என கூறினார்.