சமீப காலமாக குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியியல் தொந்தரவு என்பது நாளுக்கு நாள் அதிகாித்துள்ளது. இதில் பெரும்பாலும் ஈடுபடுபவா்கள் உறவினா்களும், ஆசிாியா்களும் தான். இந்த வக்கீர புத்தி கொண்ட சல்லாபகாரா்களை தண்டிக்கும் விதமாக சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் தொடா்ந்து அவா்கள் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபவா்களின் தண்டனையை அதிகாிக்கும் விதமாக ஏற்கனவே இருக்கும் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இனி மரண தண்டனை விதிக்கும் வகையில் 4, 5 மற்றும் 6- வது பிாிவுகளில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறை பொற்றை பகுதியில் உள்ள ஓரு தனியாா் உயா்நிலை பள்ளியில் பணிபுாியும் ஆசிாியா் டேவிட்ராஜ் தினமும் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை வகுப்பறை மற்றும் தனது அறைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளாா். மேலும் வெளியே சொன்னால் தனது பாடத்தில் தோல்வியடைய செய்வதாகவும் மிரட்டியுள்ளாா். இதனால் மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி இதை வெளியே சொல்லாமல் ஆசிாியா் டேவிட்ராஜின் பாலியியல் தொந்தரவுக்குள்ளாகி வந்துள்ளனா். இந்த நிலையில் சில மாணவிகளின் மாற்றத்தை உணா்ந்த பெற்றோா்கள் அவா்களிடம் விசாாித்ததில் அந்த மாணவிகள் நடந்ததை கூறி கதறி அழுதனா். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டு பிரச்சினையில் ஈடுபட்டனா். இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாாிகள் விசாரணை மேற்கொண்டனா். பி்ன்னா் கொல்லங்கோடு போலீசார் டேவிட் ராஜை இன்று கைது செய்து விசாாித்ததில் தினமும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஓப்பு கொண்டுள்ளாா்.