Skip to main content

ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் கருப்பணன்!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018


ஸ்டெர்லைட் ஆலை இயங்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் அரசால் ஒன்றும் செய்யமுடியாது என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றம் அரசுக்கு மேலானதாக உள்ளது. நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது.

 

 

சேலம் 8 வழிச்சாலையை பொதுமக்களோ, விவசாயிகளோ எதிர்க்கவில்லை. சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிறு, சிறு விவகாரங்களை கூட சிலர் பெரிதாக்குகின்றனர். இந்த சாலை அமையப்பெற்றால் சுங்கம் வசூலிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்கும்.

சேலம் - சென்னை எட்டு வழி சாலைக்கு சுமார் 8 லட்சம் மரங்கள் வெட்டப்படுவதாக கூறுகிறார்கள். நாங்கள் மரம் வெட்டினாலும் 65 லட்சம் மரம் நட்டுவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்