காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிய இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற இருந்தது.
ஆட்சியர் அலுவலகம் வரை வந்த விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்துறங்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். குறைத்தீர் கூட்டத்தை அனைத்து விவசாயிகளும் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால், இருக்கைகள் அனைத்தும் காலியாக காணப்பட்டது. இதனால் பாதியிலேயே விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் தடைப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தைவிட்டு வெளியேறினர்.
இதற்கிடையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும், குழு அமைத்தாலும் தமிழகம் ஏற்கவேண்டும் என்று நேற்று நாகையில் கருத்துக்கூறிய பாஜக தமிழக தலைவர் தமிழிசைக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் படுத்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Published on 28/03/2018 | Edited on 28/03/2018