அண்மையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. இதற்காக கரூரில் ஸ்டாலினை வைத்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒரு லட்சம் பேரை திரட்டுவதற்கான பணிகளிலும் செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததற்கு ஈடுகட்டும் வகையில் 2500 பேரை விழா நடத்தி அமமுக, திமுக, மதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.
அதன்படின இந்த இணைப்பு நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணி அதிமுக தலைமை அலுவலகம் பக்கத்தில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் 11.30 மணி வரை அந்த விழா நடத்தப்படவில்லை. அந்த திருமண மண்டபத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
விழாவுக்கு வந்த ஆட்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்ததே இதற்கு காரணம். அதனை சமாளிக்க சென்னை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆட்களை திரட்டி வருமாறு மா.செ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த ஆட்கள் வர தாமதமானதால் விழாவுக்கு தலைவர்கள் வருவதும் தாமதமாகியுள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.