Skip to main content

"நீட் தேர்வு தொடர்பாக 25,000 மின்னஞ்சல்கள் வந்துள்ளன" - ஏ.கே ராஜன் தகவல்!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
ghj

 

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து, இக்குழுவில், கடந்த 10 ஆம் தேதி மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர்  உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்டு வருகிறது.

 

மேலும், பொதுமக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம் என்று இக்குழு தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 25 ஆயிரம் மின்னஞ்சல்கள் நீட் தேர்வு தொடர்பாக தங்களுக்கு வந்துள்ளதாக அக்குழுவின் தலைவர் ஏ.கே ராஜன் தெரிவித்துள்ளார். அதில் நீட் தேர்விற்கு ஆதரவாகவும், எதிராகவும் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும், அதில் நீட் தேர்வுக்கு எதிரான மின்னஞ்சல்களே அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்