Skip to main content

இந்திய வரலாற்றில் முதன்முறையாக... சரித்திரம் படைத்த சாதனைப் பெண்கள்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

இந்திய நாட்டிலேயே முதன்முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பெண் கமாண்டோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

women commando force formed to handle naxals

 

 

இதற்காகவே 30 பெண் கமாண்டோக்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பாஸ்தர் மற்றும் தண்டேவாடா பகுதியில் இந்த கமாண்டோ படை களமிறங்கியுள்ளது. இந்த பெண் கமாண்டோக்கள் குழுவுக்கு தண்டேஸ்வரி ஃபைட்டர்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த சாதனை குழுவில் இடம்பெற்றுள்ள 30 பேரில் 5 பேர் நக்ஸல்களாக இருந்து பின்னர் சரணடைந்தவர்கள் என்பது சிறப்பு அம்சம். தற்போது இந்த குழுவினர் பாஸ்தர் மற்றும் தண்டேவாடா பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனை ஆண்டு கால இந்திய வரலாற்றில் நக்ஸல்களை ஏத்திக்க முழுவதும் பெண்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட படை இது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்