Published on 14/06/2019 | Edited on 14/06/2019
கேரளாவில் அனைவராலும் விரும்பி குடிக்கும் ஃபுல்ஜார் சோடா தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபுல்ஜார் சோடா என்பது ஒரு கண்ணாடி கிளாஸில் சோடாவை நிரப்ப வேண்டும்.அதில் 10 பச்சை மிளகாய் , இஞ்சி, புதினா , எலுமிச்சை சாறு , உப்பு ஆகியவற்றை எல்லாம் சேர்த்து அரைத்து அதில் சப்ஜா விதையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு குட்டி கிளாசில் அதை சேர்த்து தண்ணீர் நிரப்பி அப்படியே அந்த சோடா நிரம்பிய கிளாஸில் போட வேண்டும். பின் அது பொங்கி வர ஆரம்பிக்கும், உடனே அதை ஒரே வாயில் இடைவெளி விடாமல் குடித்து முடிக்க வேண்டும். இதுதான் இந்த ஃபுல்ஜார் சோடா சேலஞ். இது குடிக்கும் போது சோடாவில் காரம் கலந்த சுவையுடன் இருக்கும்.இது கேரளாவில் இளைஞர்களை மிக வேகமாக கவர்ந்து வருகிறது.