Skip to main content

மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் "UMANG" APP- ல் உள்ளது !

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒரே மொபைல் செயலியில் இருக்கும் வகையில் "UMANG" ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று "UMANG" என டைப் செய்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை தொடர்ந்து "தொலைபேசி எண் " மற்றும் "முழுதகவல்கள்" உள்ளீடு செய்து நிரந்தர கணக்கை "UMANG" ஆப் -ல் உருவாக்க வேண்டும். 
 

umang app



அதன் பிறகு  இந்த செயலியில் மத்திய அரசின் ஆதார் கார்டு , பாஸ்போர்ட் தொடர்பான விவரங்கள் , பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பான விவரங்கள் , மத்திய அரசின் ஆயூஷ்மான் பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் விவரங்கள் , Employees Provident Fund Organization (EPFO) தொடர்பான விவரங்கள் , பிரதமரின் முத்ரா கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விவரங்கள் , பிரதான் மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டங்கள் தொடர்பான விவரங்கள் , Employees State Insurance Corporation (ESIC) தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் இந்த மொபைல் செயலிக்குள் தனித்தனியே ஒவ்வொரு திட்ட விவரங்களும் உள்ளது . 

மேலும் "UMANG" ஆப்-ல் அனைத்து மாநில அரசின் நலதிட்டங்கள் தொடர்பான விவரங்களும் இந்த மொபைல் செயலியில் உள்ளது. எனவே வீட்டிலிருந்தவாரே பொதுமக்கள் ஒவ்வொரு வரும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களை எவ்வாறு பெறுவது தொடர்பான முழு தகவல்கள் அவர்களுக்கு "UMANG" ஆப் மூலம் கிடைக்கும். இதில் "DIGI-LOCKER" வசதியும் உள்ளது. இதற்கு தமிழக இளைஞர்கள் ஒவ்வொரு வரும் இத்தகைய செயலியின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

அப்போது தான் மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் மக்களுக்கு முக்கியமான அரசின் திட்டங்களை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இது போன்ற மக்களுக்கு தேவையான மொபைல் செயலியை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்தால் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்