அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனம் இருக்கு, ஆனால் பணம்தான் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை கே.வி.கே.குப்பத்தில் தீ விபத்தில் சேதமான 60-க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்,
கடுமையான நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கு 14,000 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனம் உள்ளது ஆனால் பணம்தான் இல்லை. தமிழக மக்களிடம் தாமரைக்கோ, சூரியனுக்கோ, மக்கள் நீதி மய்யத்திற்கோ இடமில்லை.. மக்கள் மனதில் எப்போதும் இருப்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாதான் என்று அவர் கூறினார்.