Skip to main content

மேட்டுக்குடி பெண்கள் என்றால் துப்பாக்கிச்சூடு... தாழ்த்தப்பட்ட பெண்கள் என்றால் மிரட்டலா..? - எவிடென்ஸ் கதிர் காட்டம்!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

vvbn


உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்து அடக்கம் செய்தனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக, இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் அடுத்த நாள் காலை மற்றொரு பெண் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்காரங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது, இதற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளதா, இதனை எப்படி தடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளை சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

உத்தரப்பிரதேசத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி அந்தப் பெண்ணின் சடலத்தை அவர்களின் பெற்றோரிடமே காட்டாமல் எரித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

இளம் பெண்ணை மனிதவதை செய்து கொன்றுள்ளார்கள். அந்தப் பெண்ணை நாக்கை அறுத்து, கழுத்தை காயப்படுத்தி, முதுகுத் தண்டை உடைத்து கொடுமையான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே, 22 வயது இளம்பெண் ஒருவர் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அப்படி என்றால் அங்கு என்ன நடைபெற்று வருகின்றது, பெண்களுக்கு அந்த மாநிலத்தில் ஏதாவது பாதுகாப்பு இருக்கின்றதா? அங்கு பெண்கள் வாழ முடியாதா, இது சுதந்திர நாடா அல்லது கொடுங்கோல் நாடா என்பது தெரியவில்லை. 

 

மேட்டிக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனையும், என்கவுண்டரும் அளிக்கப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், இவர்களுக்கு மட்டும் ஏன் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். பின்னால் உயர் ஜாதி என்ற ஒன்று இருப்பதனால் தானே? அப்படி ஒன்று இருந்தால் இவர்கள் இந்த நாட்டில் எந்த விதமான தவறு செய்யலாமா? அவர்களுக்குத் தண்டனை என்ற ஒன்று இல்லையா? கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் கொல்லப்பட்டால் ஏன் யாருமே கண்டு கொள்ளமாட்டேன் என்கிறார்கள், அவர்கள் மனிதர்கள் இல்லையா, அவர்களுக்கும் உயிர் இருக்கிறதே? அவர்களையும் சக மனிதர்களாக பார்க்க வேண்டும். 

 

Ad

 

அந்த மாநிலத்தில் பா.ஜ.கவே சட்டமன்ற உறுப்பினர் மீது இதே மாதிரியான வழக்கு இருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை லாரி ஏற்றி கொல்கிறார்கள். இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதற்கு இதுவரை அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதா? இந்தியாவில், தினமும் பல்வேறு பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வெறும் 5 சதவீதம் மட்டுமே வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. மற்றவை அனைத்தும் யாரும் கண்டும் காணாமல் விடப்படுகிறது, மறைக்கப்படுகிறது, அல்லது பேசி தீர்க்கப்படுகிறது. இது ஒரு நல்ல ஜனநாய நாட்டில் நடக்கக் கூடிய சம்பவமா? இதனை முறைப்படுத்த இந்த அரசு இதுவரை என்ன செய்துள்ளது. இவ்வாறு கூறினார்.


 

 

Next Story

மதுபோதையில் தகராறு; வாலிபரை வெட்டிக் கொன்ற நண்பர்கள்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

A teenager passed away by his friends in thiruvallur

 

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு தனது நண்பர்களுடன் வெளியே செனறுள்ளார். வெளியே சென்ற அஜித் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த அஜித்தின் பெற்றோர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இதற்கிடையே, ராமாரெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் மீஞ்சூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், அந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின்னர், பேரூராட்சி உதவியுடன் அந்த சடலத்தை மீட்டனர். அப்போது, அந்த சடலத்தின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளது.

 

அதனை தொடர்ந்து, அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், கிணற்றில் சடலமாக கிடந்தவர் காணாமல் போன அஜித் என்ற அதிர்ச்சி தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. மேலும், அவரது நண்பர்களான நாகராஜ் (21), வசந்தகுமார், மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

 

அந்த விசாரணையில், சம்பவ தினத்தன்று அஜித் தனது நண்பர்களான நாகராஜ், மோகன் (22), சாய் (22), கணேஷ் (25), வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில் போதை தலைக்கேறிய அஜித் தனது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், அஜித்தை கத்தியை வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அஜித்துடைய கை, கால்களை துணியால் கட்டி ஏரிக்கரையில் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகராஜ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 3 நண்பர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

Next Story

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

The young man who passed away on the railway track

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் - அமுதா தம்பதியர். மெக்கானிக்கல் என்ஜீனியரான இவர்களது மகன் பாண்டியராஜன், நேற்று (17.11.2021) காலையில் பெற்றோரிடம் வயலுக்குச் சென்றுவருகிறேன் எனக் கூறிச் சென்றார். ஆனால், மதியம் வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகனைத் தேடிச் சென்றபோது பாண்டியராஜன் வயல் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருச்சி ரயில்வே காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டியராஜனின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் உள்ளது என தெரிவித்தனர். ‘கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியராஜனின் வயலில் பணியில் இருந்தபோது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள்தான் பாண்டியராஜனை கொன்று உடலை தண்டவாளத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். எனவே இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்’ என புகார் செய்துள்ளனர். இதுகுறித்து துவாக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.