Skip to main content

குணமடைந்த தமன்னாவுக்கு சக நடிகைகள் வாழ்த்து!!!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020
tamanna

 

 

கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

 

இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

 

வீடு திரும்பிய நிலையில், தமன்னா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், “படபிடிப்பில், நானும், என் குழுவினரும் பாதுகாப்பாகவே இருந்தோம். லேசான காய்ச்சலால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன்; அதில், கரோனா பாதிப்பு உறுதியானது.

 

தனியார் மருத்துமனையில் சேர்ந்தேன். மருத்துவர்களின் தீவிர பரிசோதனைக்கு பின், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டேன். உண்மையிலேயே, அது கடினமான வாரம். உலகெங்கிலும், பல லட்சக்கணக்கான மக்களை தொந்தரவு செய்யும் இந்த அபாயத்தில் இருந்து, நான் முழுமையாக மீள்வேன் என நம்புகிறேன்.

 

இப்போதைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி, நான் சுயமாக தனிமைப்படுத்தி உள்ளேன். என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. பாதுகாப்பாகவும், அரோக்கியமாகவும் இருங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

 

வீடு திரும்பிய தமன்னாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்