Skip to main content

இயக்குனர் முத்தையா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

Muthaiya

 

'குட்டிப்புலி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் முத்தையா. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'தேவராட்டம்'. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த படத்திற்கு 'புலிக்குத்தி பாண்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்தநிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, புலிக்குத்தி பாண்டி படம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டீவியில் நேரடியாக வெளியாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்