Published on 03/12/2018 | Edited on 03/12/2018
இன்று மாலை ஆறு மணிக்கு ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் மரணமாஸ் பாடல் வெளியீடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. பின்னர், 5:30 மணிக்கே தயாரிப்பு நிறுவனத்தின் ஆப்பில் முன் கூட்டியே வெளியிடப்பட்டது. தற்போது அனைவரும் இந்த பாட்டை கேட்கும் வகையில் யூ-ட்யூபில் ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது.
இந்த பாடலின் துவக்கத்தில், ரஜினி வாய்ஸ் வருகிறது. அதில், “பாக்கத்தான் போறே இந்த காளியோட ஆட்டத்தை” என்கிறார். அடுத்து தடலாடியான இசையில், அனிருத் பாடலை பாடுகிறார். பாட்டின் நடுவில் எஸ்.பி.பியின் கர்ஜனை குரல் ஒலிக்கிறது.