Skip to main content

சூரரைப்போற்று படத்தை புகழ்ந்து தள்ளிய குஷ்பு!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

soorarai potru

 

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூரரைப்போற்று. மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

வெளியான நாள் முதலிலிருந்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ட்விட்டரில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இப்படத்தை பார்த்த குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சூரரைப்போற்று என்ன படம், சூர்யாவின் நடிப்பு அபாரம், உங்களது கண்களே பேசிவிட்டன. ஒவ்வொரு ப்ரேமிலும் எமோஷன். இப்படி ஒரு மாஸ்டர் பீஸை கொடுத்ததற்காக சுதா கொங்கராவுக்கு எனது கைத்தட்டல்கள். நடிகைகள் அபர்ணா மற்றும் ஊர்வசி ஆகியோரும் அபாரமாக நடித்துள்ளனர். நிச்சயம் பார்க்க வேண்டிய படம். படக்குழுவிற்கு எனது பூங்கொத்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்