Skip to main content

'ஹன்சிகா எடுத்திருக்கும் முடிவு, அவரின் அசாதாரண திறமையால் வெற்றிபெரும்' - பிரபல இயக்குனர் புகழாரம் 

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
maha

 

ஹன்சிகா மோத்வானி நடித்த "மஹா" படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வைரல் ஆகி, ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் ஹன்சிகா மோத்வானி என்ற பெயருக்கு முன் "இளவரசி" என்ற தலைப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது....

 

 

 

"ஆம், நிச்சயமாக அவர் ஒரு இளவரசி தான். ஒரு இளவரசியின் அடிப்படைக் கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை உட்பட ஹால்மார்க் குணங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் ஹன்சிகா. நாயகி மையப்படுத்திய படங்களை கொடுக்கும் அளவுக்கு கமெர்சியல் மார்க்கெட்டை வைத்திருக்கிறார் ஹன்சிகா. நாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க அவர் எடுத்திருக்கும் முடிவு, அவரின் அசாதாரண திறமையால் நிச்சயம் பலன் அளிக்கும். இந்த படத்தில் பல குணங்களை கொண்ட மிக சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. மிகவும் வைரல் ஆன கண்ணாடி போஸ்டர் உண்மையில் சொல்வது,  'கண்ணாடியில் நீங்கள் பார்ப்பது அப்படியே உண்மை இல்லை, இது மாறும்' என்பது தான். இதன் அடிப்படையில் தான் அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். லக்ஷ்மன் போன்ற ஒரு ஒளிப்பதிவாளர், ஜிப்ரான் போன்ற ஒரு இசையமைப்பாளர் நல்ல படம் கொடுக்கும் எனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் நல்ல படமாகவும், வணிக ரீதியில் வெற்றி படமாகவும் அமையும் என நம்புகிறேன். நல்ல திறமையாளர்களை கண்டு, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மதி சாருக்கு ஏற்ற வெற்றி இந்த படத்தில்  கிடைக்கும்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''இந்தக் கெட்ட கனவு முடிவுக்கு வர வேண்டும்'' - ஹன்சிகா இரங்கல்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

sgs

 

கரோனா பாதிப்பு நெருக்கடிக்கு இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை 'அம்பன்' புயலாக மாறி முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டது.
 


பிறகு இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மேலும் புயலுக்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி அம்பன் புயல் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், அம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் சிதைவுகள் மற்றும் அழிவுகளின் பாதையை விட்டுச் சென்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்காக என் இதயம் வெளியே செல்கிறது. இந்தக் கெட்ட கனவு முடிவுக்கு வர வேண்டும்! கொல்கத்தா மற்றும் ஒடிஷாவுக்கான என் பிரார்த்தனைகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

மஹா படத்தில் சிம்பு இந்த கேரக்டரில் தான் நடிக்கிறார் - இயக்குனர் தகவல் 

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும் 'மஹா'படத்தில் ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஜமீல் 'மஹா' படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து பேசியபோது...

 

str

 

''மஹா' படத்தில் சிம்பு ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முழுமையான உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றம் தான் என்றாலும், அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியமானது, கதையில் அவரது கதாப்பாத்திரம் ஃபிளாஸ்பேக் பகுதியில் 45 நிமிடங்கள் வரக்கூடிய பெரிய பாத்திரம் ஆகும். அவர் ஒரு பைலட்டாக நடித்திருக்கிறார். நிஜத்தில் கோவாவில் 30 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த பைலட்டுக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவரது கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அந்த கதாப்பாத்திரத்தை மிகுந்த கவனத்துடன் மெருகேற்றி உருவாக்கியுள்ளோம். அவரது கதாப்பாத்திரம் பல ஆச்சர்யங்கள் கொண்டிருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ஜமீல். என்னுடைய பெயரை விளம்பரப்படுத்தும் பொருட்டு இப்படி வைத்திருக்கிறேன் என தப்பாக நினைத்து விடாதீர்கள்.

 

 

முதலில் அவரது ரோலுக்கு சாஹிப் என்று தான் பெயர் வைத்திருந்தோம் ஆனால் அந்தப்பெயர் மிகவும் வழக்கமான பெயராக இருப்பதாக படக்குழு கருதியதால் இந்தப்பெயரை முடிவு செய்தோம். சிம்பு போல் ஒரு கச்சிதமான நடிகரை நான் பார்த்ததேயில்லை. தமிழ் சினிமவில் மிக முக்கிய ஆளுமையாக, மிக பிரபல நடிகராக இருந்தும், அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு டேக்கிலும் இது ஓகேவா, இன்னொரு முறை போகலாமா என எந்த ஒரு அலட்டலும் இன்றி கேட்டுக்கொண்டே இருந்தார். தான் பங்கு கொள்வதில் கச்சிதத்தை கடைப்பிடிப்பவராக இருந்தார். படப்பிடிப்பு  தளத்தில் முதல் ஆளாக இருப்பார். எப்போது வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு நேரம் தவறாமல் முதல் ஆளாக அங்கு இருந்தார். படப்பிடிப்பில் வெகு சிரத்தையுடன் அமைதியாக இருந்தார். அவரது பங்கு எங்கள் படத்தை மேலும் பல படிகளுக்கு எடுத்து செல்லும். அவரது ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அதனை உறுதி செய்து எங்களை உற்சாகமூட்டியிருக்கிறது'' என்றார்.