Skip to main content

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடும் டீஸர்..

Published on 12/11/2020 | Edited on 12/11/2020
sibi

 

 

வால்டர் படத்திற்கு பிறகு சிபிராஜ் நடித்து வரும் படம் கபடதாரி. இவருக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார். சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்க, லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக், சிபி ராஜின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

 

கபடதாரி படத்தின் டீசரை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், நாளை மாலை ஐந்து மணிக்கு வெளியிடுகிறார். இத்தகவலை படத்தின் தயாரிப்பளார் லலிதா தனஞ்செயன், தனது ட்விட்டர் பக்கத்தில்   அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்