Skip to main content

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் நடிகை ரேவதி!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

actress revathi

 

90களில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ரேவதி, கடந்த  2002ஆம் ஆண்டு வெளியான ’மித்ர மை ஃப்ரெண்ட்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இதுவரை மொத்தம் நான்கு படங்களை அவர் இயக்கியுள்ள நிலையில், ஐந்தாவது படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

 

ரேவதி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் நடிகை கஜோல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.  'தி லாஸ்ட் ஹுர்ரா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிலைவ் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படம் குறித்து நடிகை ரேவதி கூறுகையில், ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவித்தார். மேலும், இப்படத்தில் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் நடிகை கஜோல் நடிக்க இருப்பதாகவும், இப்படத்திற்கான கதையை எழுத தொடங்கியபோது நடிகை கஜோல்தான் தனது மனதில் முதலில் வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘மும்பை கட்டிங்’ என்ற ஆந்தாலஜி படத்தில் ஒரு பாகத்தை ரேவதி இயக்கியிருந்த நிலையில், தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கவுள்ளார்.

 

இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, விரைவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆயத்தமாகிவருகிறது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

32 ஆண்டுகளுக்குப் பிறகு சல்மான்கானுடன் நடிக்கும் 90'ஸ் ஹீரோயின்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

 after 32 years Revathy to reunite with salman khan for tiger 3

 

80 மற்றும் 90களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரேவதி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார். இப்போதும் பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் காமெடி கலந்த கதாபாத்திரம் என நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வந்த ரேவதி சில படங்களையும் இயக்கியுள்ளார். 

 

அந்த வகையில் தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கஜோல், விஷால் மற்றும் ஜெத்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ரேவதி ஈடுபட்டு வருகிறார்.

 

அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரேவதி, 32 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மணீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் 'டைகர் 3' படம் உருவாகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ள நிலையில் ரேவதி கதாபாத்திரம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

நடிகை ரேவதி இந்தியில் அறிமுகமான முதல் படம் 'லவ்'. இப்படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணையவுள்ளதால் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

நடனமாட வயது ஒரு பொருட்டல்ல! 15 ஆண்டுகளுக்குப் பின் மேடையேறிய ரேவதி!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1983-ல் வெளிவந்த மண்வாசனையில்தான் அறிமுகமானார் ரேவதி. திரைஉலகில் 36 வருடங்களாக நிலைத்து நிற்கும் ரேவதியின் சமீபத்திய திரைப்படம் ஜாக்பாட். அவருடைய உழைப்பு திரையில் மட்டுமல்ல..15 ஆண்டுகளுக்குப் பிறகு மேடையேறி நடனமும் ஆடியிருக்கிறார். 

 

actress revati after 15 years on stage

 

 

பரத நாட்டியத்தை தனது ஏழாவது வயதிலேயே பயில ஆரம்பித்தவர் ரேவதி. அவரது நடன அரங்கேற்றம் 1979-ல் நடந்தது. சென்னையிலுள்ள ஸ்ரீசரஸ்வதி கான நிலையத்தில்தான் அவர் நடனம் பயின்றார். அந்த நாட்டியப்பள்ளி காட்டுமன்னார் கோயில் முத்துக்குமாரசாமி பிள்ளையின் சீடரான லலிதாவால் 1939-ல் தொடங்கப்பட்டது. அதன் 80-வது ஆண்டு விழாவில்தான், முன்னாள் மாணவியான ரேவதி,  ‘க்ருஷ்ணா நீ பேகன பாரோ’ என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

 

actress revati after 15 years on stageactress revati after 15 years on stage

 

“என்னுடைய அம்மாவும் குருவான ரெங்கநாயகி ஜெயராமனும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ‘நீ எவ்ளோ வேணாலும் நடிச்சிக்கோ.. ஆனா.. பரத நாட்டியத்தை விடாதே’ன்னு. ஆனா.. என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியல.” என்கிறார் ரேவதி.  

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். மனதையும், உடலையும் செம்மைப்படுத்தக்கூடிய தெய்வீகக்கலை அல்லவா பரதநாட்டியம்! மேடையிலும் ரேவதியின் கலைச்சேவை தொடரட்டும்!