உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனாவின் தீவிரம், தற்போது இந்தியாவில் கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் இந்தியாவில் ஒன்பதாயிரத்திற்கும் மேலானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல தமிழ்நாட்டில் சென்னையில் கரோனாவின் தீவிரம் அதிகரித்திருப்பதால் பல மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அட்மிட் செய்ய பெட் இல்லாத அளவிற்கு இருப்பதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகரும் பிரபல தொகுப்பாளருமான வரதராஜன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது. இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல, முயற்சித்தபோது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை, இங்கு அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்தது.
மருத்துவமனைகளின் ஓனர், எம்டி என அனைவரிடம் பேசினாலும் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லைர். அவருக்கு எப்படிக் கரோனா வந்தது என்றே தெரிவில்லை, காரணம் அவர் மிகவும் டிஸிபிலிண்டானவர். அதன் காரணமாக நமக்கெல்லாம் கரோனா வராது என்று நம்பிக்கையில் வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் செல்லுங்கள். அப்பொழுதும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அரசின் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்” என்று கூறியுள்ளார்.