Skip to main content

ஆரியுடன் இணைந்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
aari

 

 

 

ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் காதலே காதலுக்கு தடையாக உள்ளதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தை 'அய்யனார்' பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்குகிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்