Published on 02/05/2019 | Edited on 02/05/2019
தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அதன்பின் மகா வஜிரலங்கோன் (66) அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இவர் வரும் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக மன்னராக முடிசூடி அறியணை ஏறவுள்ளார். இந்நிலையில் தனது பாதுகாவலராக பணிபுரிந்த சுதிடா என்பவரை இன்று மணமுடித்துள்ளார். ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்தான இவர் தற்போது நான்காவது மனைவியாக சுதிடாவை திருமணம் செய்துள்ளார். தாய் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமான உதவியாளராக பணியாற்றிய சுதிடா கடந்த 2014 ஆம் ஆண்டு மகா வஜிரலங்கோனின் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.