Published on 22/08/2021 | Edited on 22/08/2021

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் போர் நிறைவுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அங்கு தங்களது ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர், காபூலுக்கு விரைந்துள்ளார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட மேலும் 168 பேரை இந்தியா மீட்டுள்ளது. இந்தியர்கள் உட்பட 168 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத்தில் தரையிறங்குகிறது. காஸியாபாத் விமானப்படை தளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்ட 168 பேரும் டெல்லி அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.